பதிவு செய்த நாள்
23 பிப்2016
00:55
மும்பை : ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் ஒரு பிரிவான, ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம், ‘டிக்’ என்ற பங்கு வர்த்தக வலைதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், சில்லரை முதலீட்டாளர்கள், சரியான பங்குகளை தேர்வு செய்வதற்கான அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பங்கு வர்த்தகம் நடைபெறும்போதே, சந்தையின் போக்கு எப்படியிருக்கும் என்பதை அறிந்து, அதற்கேற்ப முதலீட்டு ஆலோசனைகளை இத்தளம் வழங்குகிறது. ஒரு நிறுவனப் பங்கின் அனைத்து விவரங்களையும், இதில் அறிந்து கொள்ளலாம். இதில், ஒரு பங்கின் விலை, ஓராண்டுக்கு முன் எப்படி இருந்தது; தற்போது எப்படி உள்ளது; இனி எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட, 50 வகையான தகவல்களை பெறலாம். பங்கு முதலீட்டில் போதிய அனுபவம் இல்லாதோர் கூட, சுலபமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட, டிக் உதவும் என, ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|