பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:37

மும்பை : தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த, ஆக்ட வேர் டெக்னாலஜிஸ் நிறுவனம், மூலதனச் சந்தை யில், பங்கு வெளியீடு மேற்கொள்ள, மும்பை பங்குச் சந்தை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வெளியீட்டிற்குப் பின், இந்நிறுவனப் பங்குகள், சிறிய மற்றும் நிறுவனங்களுக்கான, எஸ்.எம்.இ., பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். அப்போது, 100 சதவீதம், ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு, இச்சந்தையில் பட்டியலிடப்படும் முதல் நிறுவனம் என்ற சிறப்பை, ஆக்டவேர்டெக்னாலஜிஸ் பெறும். இந்நிறுவனம், 10 ரூபாய் முகமதிப்புள்ள ஒரு பங்கின் வெளியீட்டு விலையை, 100 ரூபாய் என, நிர்ணயித்து உள்ளது. 11.11 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி, கந்து வட்டி, மது, புகையிலை, போதை மருந்து, சூதாட்டம் போன்ற, அறத்திற்குப் புறம்பான தொழில்கள்வாயிலாக வருவாய் பெறுவது குற்றம். அதுபோன்ற தொழில்களில் ஈடுபடாமல், இதர விதிகளையும் முழுமையாக பின்பற்றுபவை, ஷரியத் சட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் எனப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|