பதிவு செய்த நாள்
01 மார்2016
23:41

வருமான வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையை, தமிழகத்தில் மூடிக்கிடக்கும், ‘நோக்கியா’ ஆலையின் நிர்வாகம் பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பின்லாந்து நாட்டை சேர்ந்த நோக்கியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் நடத்தி வந்த மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலை, மத்திய அரசு திடீரென வருமான வரி பாக்கி, ‘நோட்டீஸ்’ அனுப்பியதை தொடர்ந்து மூடப்பட்டது. அதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ‘வருமான வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்’ என, அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். அவர், ‘வரி பாக்கி தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கும் நிறுவனங்கள் அதை திரும்ப பெற்றால், அவர்கள், வரி பாக்கியை மட்டும் செலுத்தினால் போதுமானது. வட்டி, அபராதம் செலுத்த தேவையில்லை’ என, தெரிவித்துள்ளார். இதன்படி, அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கும், ‘நோக்கியா’ நிறுவனத்துக்கும், ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதை அந்த நிறுவனம் ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|