பதிவு செய்த நாள்
01 மார்2016
23:42

புதுடில்லி : தொழிலதிபர் ரத்தன் டாடா, ‘நெஸ்ட்அவே’ என்ற வீட்டு வசதி நிறுவனத்தில், பெருந்தொகையை முதலீடு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்ற விவரம் தெரியவில்லை.நெஸ்ட்அவே நிறுவனம், புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ வகையை சேர்ந்தது.இந்நிறுவனம், கட்டப்பட்ட வீடுகளில், ‘கட்டில், சோபா,ஏசி, சமையலறை சாதனங்கள்’ உட்பட,அனைத்து வசதிகளை செய்து, வாடகைக்கு விடும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை, ஆறு நகரங்களில், இந்நிறுவனம், 5,000த்திற்கும் அதிகமானோரை வாடகைக்கு அமர்த்தியுள்ளது. வீட்டு உரிமையாளர்களுக்கும், வாடகைதாரர்களுக்கும் இடையே, பாலமாக, இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|