முழுக்க முழுக்க பெண்கள் பறக்­கப்­போ­குது ஏர் இந்­தியாமுழுக்க முழுக்க பெண்கள் பறக்­கப்­போ­குது ஏர் இந்­தியா ... தொழிற்­சா­லைகள் வெளி­யிடும் மாசு; புதிய நெறி­மு­றைகள் அறி­விப்பு தொழிற்­சா­லைகள் வெளி­யிடும் மாசு; புதிய நெறி­மு­றைகள் அறி­விப்பு ...
செலவை குறைக்க மாற்று யோசனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2016
07:34

வச­தி­யாக இருக்கும் மற்­ற­வர்­களை பார்த்து, நம் வாழ்­வி­யலை மேம்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கும் பழக்கம் பல­ரிடம் இருக்­கலாம். ஆனால், எப்­போ­தா­வது வாழ்­வி­யலை கட்­டுப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்­த­துண்டா? இல்லை எனில் இனி யோசி­யுங்கள்-. அதா­வது உங்கள் வாழ்­வி­யலை எளி­தாக்கிக் கொள்ள முயற்­சிப்­பது. இதன் பொருள், வாழ்க்கைத் தரத்தை பாதிக்­காத வகையில் செல­வு­களை குறைத்துக் கொள்­வது. இதற்கு, முதலில் செல­வு­களை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எதற்­காக எல்லாம் செலவு செய்­கி­றீர்கள் என்­பதை அறிந்து, பணத்தை மேலும் சிறந்த வழியில் பயன்­ப­டுத்த முடி­யுமா என யோசிக்க வேண்டும். வாங்கும் பொருட்கள் நீண்ட நாள் தேவைக்­கா­னதா? அல்­லது அந்த தரு­ணத்தின் உந்­துதலால் வாங்­கு­வதா என, சீர்­துாக்கிப் பார்த்தால் தேவை­யில்­லாத செல­வு­களை தவிர்க்­கலாம்.
ஆன்லைன் ஷாப்பிங் கையேடு
இணையம் மூலம் பொருட்­களை வாங்­கு­வது எளி­தாக இருக்­கி­றது. சிறிய நக­ரங்­களில் கூட இந்த முறை வேக­மாக பிர­ப­ல­மாகி வரு­கி­றது. ஆனால், ஆன்-­­லைனில் ஷாப்பிங் செய்யும் போது கவ­ன­மா­கவும் இருக்க வேண்டும். பாது­காப்­பான முறையில் ஷாப்பிங் செய்ய மட்­டு­மல்ல, இணைய ஷாப்பிங் மூலம் கிடைக்கக் கூடிய பலன்­களை அதிக அளவில் பயன்­ப­டுத்திக் கொள்­ளவும் இந்த கவனம் உதவும். ஆன்-­­லைனில் ஷாப்பிங் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்­டிய விஷ­யங்கள் சில:
தள்­ளு­படி தேடல்:இ – -காமர்ஸ் தளங்­களில் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு முன், முதலில் அந்த பொருட்­க­ளுக்­கான தள்­ளு­படி இருக்­கி­றதா என தெரிந்து கொள்­ளுங்கள். பல தளங்கள் தள்­ளு­படி கூப்பன் போன்­ற­வற்றை அளிக்­கின்­றன. விலை குறைப்பு போன்ற சலு­கை­களும் இருக்­கலாம். இதை முத­லி­லேயே தெரிந்து கொள்ள முடிந்தால், அதற்­கேற்ப வாங்கும் பொருளை திட்­ட­மி­டலாம். தள்­ளு­படி கூப்பன் போன்­றவை பற்­றிய தக­வல்கள் தரும் இணை­ய­த­ளங்கள் பல இருக்­கின்­றன. நீங்­களே கூட கூகுளில் தேடிப் பார்க்­கலாம். தள்­ளு­படி மட்­டு­மல்ல கேஷ்பேக் போன்ற சலு­கை­களும் இருக்கின்றன.
விலை ஒப்­பீடு:நீங்கள் வாங்க விரும்பும் பொருள், வேறு ஒரு இ- – காமர்ஸ் தளத்தில் அதை விட குறைந்த விலையில் கிடைக்­கலாம். எனவே, பொருளை வாங்­கு­வ­தற்கு முன், இணை­யத்தில் அந்த பொரு­ளுக்­கான விலையை ஒப்­பிட்டு பார்த்துக் கொள்­வது நல்­லது. புத்­த­கங்கள் முதல், ஸ்மார்ட் போன் வரை பல வித­மான பொருட்­க­ளுக்­கான விலை­களை ஒப்­பிடும் சேவையை அளிக்கும் இணை­ய­த­ளங்கள் இருக்­கின்­றன.
விலை வலை உஷார்:நீங்கள் இணை­யத்தில் அடிக்­கடி பொருட்­களை வாங்­கு­பவர் எனில், ‘டைனமிக் பிரைசிங்’ உத்தி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இணை­ய­வா­சி­களின் வாங்கும் பழக்­கத்தின் அடிப்­ப­டையில், பொருட்­களின் விலை நிர்­ண­யிக்கும் வழக்­கத்தை, பல இ – -காமர்ஸ் தளங்கள் கடை­பி­டிக்­கின்­றன. இந்த உத்­தியே, டைனமிக் பிரைசிங் என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இதன் பொருள், தளத்தில் காண்­பிக்­கப்­படும் விலை நப­ருக்கு நபர் மாறு­பட வாய்ப்­பி­ருக்­கி­றது என்­ப­தாகும். இந்த வலையில் சிக்­கு­வதை தவிர்க்க, நீங்கள் பயன்­ப­டுத்தும் பிர­வு­சரில் உள்ள, ‘குக்கிஸ்’ எனப்­படும் கண்­கா­ணிப்பு சாப்ட்­வேர்­களை நீக்­கவும்.
பாது­காப்பு:பொருட்­களை வாங்க, கிரெடிட் கார்டு அல்­லது மொபைல் வாலெட் வாயி­லாக இணையம் மூலமே பணம் செலுத்­து­வ­தாக இருந்தால், குறிப்­பிட்ட அந்த தளம் பாது­காப்­பா­னதா என்­பதை உறுதி செய்து கொள்­ளவும். அதே போல, பாது­காப்பு இல்­லாத வை-பை வசதி மூலம் இணை­யத்தை அணுகும் போது கிரெடிட் கார்டு விவ­ரத்தை சமர்ப்­பிக்க வேண்டாம். பொருட்­களை வாங்கும் முன், அந்த பொரு­ளுக்­கான திரும்பி செலுத்தும் விதி­மு­றைகள் என்ன என்­ப­தையும் தெரிந்து கொள்­ளுங்கள்.
வாங்கும் முன் தாமதம்:தேவை­யான பொருட்­களை பார்த்­ததும் உடனே வாங்க வேண்டாம். அதை, ‘ஆர்டர்’ செய்­யாமல் உங்­க­ளுக்­கான விருப்ப பட்­டி­யலில் சேர்த்துக் கொள்­ளவும். இதன் விளை­வாக குறிப்­பிட்ட அந்த இணை­ய­தளம், உங்­க­ளுக்கு தள்­ளு­படி சலுகை மூலம் அளித்து ஈர்க்க முன்­வ­ரலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)