பதிவு செய்த நாள்
10 மார்2016
07:30

புதுடில்லி : ‘விளம்பர ஏஜன்சிகளுக்கு, பத்திரிகைகள் மற்றும் ‘டிவி’ நிறுவனங்கள் வழங்கும் தொகையில், டி.டி.எஸ்., எனப்படும், மூலவரி பிடித்தம் செய்யத் தேவையில்லை’ என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. விளம்பர ஏஜன்சி நிறுவனங்கள் பத்திரிகைகள், ‘டிவி’ நிறுவனங்களுக்கு, விளம்பரங்களைப் பெற்றுத் தந்து, மொத்த தொகையில், 15 சதவீதம் வரை, கமிஷன் அல்லது தள்ளுபடி பெறுகின்றன. இத்தொகை, கமிஷனா அல்லது தள்ளுபடியா என்பதில் தெளிவில்லாத நிலை இருந்தது. இந்நிலையில் இத்தொகை கமிஷன் அல்ல என்றும், கலைஞர்கள், மாடல்கள், புகைப்பட நிபுணர்கள் ஆகியோருக்கு வழங்கும் தொகைதான், கமிஷனாக கருதப்படும் என்றும், மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|