பதிவு செய்த நாள்
10 மார்2016
07:32

புதுடில்லி : பிரபல லென்ஸ்கார்ட் நிறுவனம், தன் வளர்ச்சிப் பணிகளுக்காக, 300 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது.மூக்குக் கண்ணாடி, லென்ஸ் போன்றவற்றை விற்பனைக்கு விடுக்கும், ‘ஆன்லைன்’ நிறுவனமான லென்ஸ்கார்ட், இந்தப் பிரிவில் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக, 300 கோடி ரூபாயை, அடுத்த சில ஆண்டுகளுக்காக ஒதுக்கி இருக்கிறது. இத்தகவலை இந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பீயுஷ் பன்சால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கண்களுக்கு தேவையான கண்ணாடிகள், அதற்கான பிரேம்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து, ‘ஆன்லைன்’ மூலமாகவும், கிளைகள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு, 5,000 கண்ணாடிகள் என்ற அளவில் தயாரித்து வருகிறது. இன்னும், இரண்டு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கையை, 30 ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரிப்போம் என்று, இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|