பதிவு செய்த நாள்
11 மார்2016
00:04
புதுடில்லி : உள்நாட்டு கார் விற்பனை, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார், 4.21 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 1 லட்சத்து, 71 ஆயிரத்து, 703 கார்கள் விற்பனை ஆகின. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 1 லட்சத்து, 64 ஆயிரத்து, 469 கார்கள் என்ற அளவுக்கு குறைவாகவே விற்பனை ஆகியிருக்கிறது. மோட்டார் சைக்கிள் கடந்த ஆண்டை விட சுமார், 11.05 சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மொத்த இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு, 12 லட்சத்து 8 ஆயிரத்து, 84 வாகனங்கள் விற்பனை ஆகின. இந்த ஆண்டு அதுவே, 13 லட்சத்து, 62 ஆயிரத்து, 219 வாகனங்கள் விற்பனை ஆகியிருக்கின்றன.சரக்கு வாகனங்களைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட சுமார், 12.76 சதவீதம் அதிகமாக விற்பனை ஆகியிருக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|