பதிவு செய்த நாள்
11 மார்2016
00:09
புதுடில்லி : வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருக்கும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் சுமார், 1,200 கோடி ரூபாய் வருமானம் வரும் என, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
பிரபல சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பி வருகிறது. இதில் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டுமானால், 10 நொடிக்கு 5.50 லட்சம் முதல், 5.75 லட்சம் ரூபாய் வரை கட்டணம் என நிர்ணயித்திருக்கிறது.
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்திய தலைவர் ரோஹித் குப்தா கூறியதாவது: இந்த ஆண்டு, 15 சதவீத அளவுக்கு விளம்பரக் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம். கடந்த ஆண்டை விட எண்ணிக்கையில் குறைவான நிறுவனங்களே அதிக நேர விளம்பரத்தை எடுத்துக் கொண்டுவிட்டன. கடந்த ஆண்டு, 4,550 பிராண்டுகள் விளம்பரம் செய்தன. இந்த ஆண்டு, 3,540 பிராண்டுகள் விளம்பரம் செய்ய உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|