பதிவு செய்த நாள்
12 மார்2016
02:24
புதுடெல்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சார்ந்த, ‘டிஏஎல் மேனுபேக்சரிங் சொல்யூசன்ஸ்’ நிறுவனம், ‘ரோபோ’ ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.தொழிற்சாலைகளுக்கான இந்த ரோபோவின் விலை, நான்கு லட்சத்திலிருந்து, 10 லட்சம் ரூபாய் அளவில் இருக்கும். இந்த ரோபோ, 2, 5, 10 கிலோ எடைகளை கையாளக்கூடிய அளவில் இருக்கும். சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த ரோபோ. டிஏஎல் மேனுபேக்சரிங் சொல்யூசன்ஸ் நிறுவனம் இதுகுறித்து தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மூன்று ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறோம். ரோபோ இப்போது இறுதி வடிவத்தை எட்டியிருக்கிறது. விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அடுத்த கட்டமாக, சார்க் நாடுகளிலும் இந்த ரோபோவை விற்பனைக்கு விடுக்க இருக்கிறோம். உணவு, எலக்ட்ரானிக்ஸ், மருந்து, வாகனம் போன்றவற்றுக்கான தொழிற்சாலைகளுக்கு, இது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|