வங்கி கடனை தரா­தோ­ருக்கு செபியும் தடைவங்கி கடனை தரா­தோ­ருக்கு செபியும் தடை ... ஹங்­கே­ரியில் அப்­பல்லோ டயர் ஆள் கிடைக்­காமல் தவிப்பு ஹங்­கே­ரியில் அப்­பல்லோ டயர் ஆள் கிடைக்­காமல் தவிப்பு ...
நுழைவு வரி விவகாரம்; ஒடிசா அரசுக்கு சாதகம்; பல ஆயிரம் கோடி கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2016
07:54

புதுடில்லி : ‘ஒடிசா அர­சுக்கு, நிலு­வையில் உள்ள நுழைவு வரி முழு­வ­தையும் செலுத்த வேண்டும்’ என, பொது துறையைச் சேர்ந்த நால்கோ நிறு­வ­னத்­திற்கு, சுப்ரீம் கோர்ட் உத்­த­ர­விட்­டுள்­ளது.
அத்­துடன் நுழைவு வரி வசூ­லிக்க விதிக்­கப்­பட்ட தடையும் நீக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், ஒடிசா அர­சுக்கு, பல ஆயிரம் கோடி வரி நிலுவை வசூ­லாகும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஒடிசா அரசு, இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்­களின் விற்­ப­னைக்கு, 12 சத­வீதம் வரை, நுழைவு வரி விதித்­துள்­ளது. ‘இது, மாநி­லங்­க­ளுக்கு இடை­யி­லான பொருட்­களின் பரி­வர்த்­த­னைக்கு தான் பொருந்­துமே தவிர, இறக்­கு­ம­தி­யாகும் பொருட்­க­ளுக்கு பொருந்­தாது’ என, ஒடிசா அர­சுக்கு எதி­ராக, 25க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்கள் சுப்ரீம் கோர்ட்டில் முறை­யிட்­டன. அதை ஏற்று, 2014ல், நுழைவு வரி வசூ­லிக்க தடை விதித்த சுப்ரீம் கோர்ட், வழக்கு முடியும் வரை, நிறு­வ­னங்கள், 50 சத­வீத வரியை, ஒடிசா அர­சிடம், ‘டிபாசிட்’ செய்து வர வேண்டும் என, உத்­த­ர­விட்­டது. இந்­நி­லையில், ஒடிசா அரசு, நிலு­வையில் உள்ள நுழைவு வரியை, அப­ரா­தத்­துடன் வசூ­லிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையில் இறங்­கி­யது. இதற்கு தடை விதிக்கக் கோரி, நால்கோ நிறு­வனம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்­மு­றை­யீடு செய்­தது.
இந்த மனு விசாரணையின் போது, தலைமை நீதி­பதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கூறி­ய­தா­வது:ஒடிசா போன்ற பின்­தங்­கிய மாநி­லங்கள், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு போதிய நிதி இல்­லாமல் அவ­திப்­ப­டு­கின்­றன. இந்த வரிபணத்தின் மூலம், ஒடிசா பயன் பெறாமல் உள்­ளது. இதை, சுப்ரீம் கோர்ட் வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. நால்கோ நிறு­வனம், நுழைவு வரி நிலு­வையை முழு­வ­து­மாக செலுத்த வேண்டும். அதே­ச­மயம், அப­ராதம் ரத்து செய்­யப்­ப­டு­கி­றது. மேலும், நுழைவு வரிக்கு விதிக்­கப்­பட்ட தடையும் நீக்­கப்­ப­டு­கி­றது. மனு தாக்கல் செய்­துள்ள, இதர நிறு­வ­னங்கள், எவ்­வ­ளவு வரி பாக்கி வைத்­துள்­ளன என்ற விவ­ரத்தை, ஒடிசா அரசு வழக்­க­றிஞர் தெரி­விக்க வேண்டும். அவ்­வாறு தெரி­விக்­க­வில்­லை­யென்றால், ஏப்., 13ம் தேதி ஒடிசா வணிக வரி ஆணையர் நேரில் ஆஜ­ராக வேண்டும். இவ்­வாறு நீதி­ப­திகள் தெரி­வித்­தனர்.
பல ஆயிரம் கோடி வரும்சுப்ரீம் கோர்ட் உத்­த­ரவால், நால்கோ, வேதாந்தா அலு­மி­னியம், டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் உட்­பட, 25க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்கள், நிலுவை வைத்­துள்ள, பல ஆயிரம் கோடி ரூபாய் நுழைவு வரியை செலுத்தும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)