பதிவு செய்த நாள்
14 மார்2016
10:33

மும்பை : இந்தியா ரூபாய் மதிப்பில் கடந்த வார இறுதியில் காணப்பட்ட ஏற்றமான நிலை, இந்த வாரமும் தொடர்கிறது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் உயர்ந்து காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 15 காசுகள் அதிகரித்து, ரூ.66.90 ஆக இருந்தது.அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலர்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டதாலும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் துவங்கியதால் வங்கித்துறை முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட நம்பிக்கை காரணமாகவும் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிரான பிற நாட்டு நாணய மதிப்புக்கள் உயர்ந்து காணப்படுவதும் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு துணை நிற்பதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த வார வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு ரூ.67.05 ஆக இருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|