தொழில் திறன் பயிற்சி நடத்­து­கி­றது போஷ் நிறு­வனம்தொழில் திறன் பயிற்சி நடத்­து­கி­றது போஷ் நிறு­வனம் ... தயா­ரிப்பு துறை; அறி­வித்­த­படி முத­லீடு குவி­ய­வில்லை; தாம­தத்தால் அஞ்சும் முத­லீட்­டா­ளர்கள் தயா­ரிப்பு துறை; அறி­வித்­த­படி முத­லீடு குவி­ய­வில்லை; தாம­தத்தால் ... ...
‘ரிலையன்ஸ் ஜியோ’ வரவு: போட்­டி­யா­ளர்­க­ளுக்கு செலவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2016
23:42

புது­டில்லி : முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் குழுமம், இந்­தாண்­டுக்குள், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னத்தின் தொலை தொடர்பு சேவையை, அறி­மு­கப்­ப­டுத்த உள்­ளது.
இது, தொலை தொடர்பு துறையில் உள்ள, ‘ஏர்டெல், வோடபோன், ஐடியா’ உள்­ளிட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு கடும் போட்­டியை உண்­டாக்கும் என, தர நிர்­ணய நிறு­வ­னங்­க­ளான, கிரிசில், இந்­தியா ரேட்டிங்ஸ் ஆகி­யவை மதிப்­பிட்­டுள்­ளன. ஆர்­ஜி­யோவை சமா­ளிக்க, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­க­ளுக்கு, போட்டி நிறு­வ­னங்கள் கூடு­த­லாக செல­வ­ழிக்கும் என்­பதால், அவற்றின் லாப வரம்பு குறையும்.குறிப்­பாக, ‘பேச்சு மற்றும் தகவல் வழிச் சேவைகள் வாயி­லாக, ஒரு சந்­தா­தா­ர­ரிடம் இருந்து பெறும் சரா­சரி வருவாய், வெகு­வாக குறைந்து விடும்’ என, இந்­தியா ரேட்டிங்ஸ் எச்­ச­ரித்­துள்­ளது. அது­போல, கிரிசில் நிறு­வனம், ‘ஆர்­ஜி­யோவின் வரு­கையால் தொலை தொடர்பு துறையில் முத­லீடு செய்­வது, லாப­க­ர­மாக இருக்­காது’ என கூறி­யுள்­ளது.
ரூபாய் 98 ஆயிரம் கோடி முத­லீட்டில், உரு­வாக்­கி­ உள்ள இந்­நி­று­வனம், தொலை தொடர்பு சேவையை துவக்­கினால், தற்­போ­துள்ள நிறு­வ­னங்­களால் அதி­ருப்தி அடைந்­துள்ள வாடிக்­கை­யா­ளர்கள், அதற்கு மாறுவர். இதன் மூலம், ஆர்­ஜியோ, தொலை தொடர்பு துறையில், குறிப்­பி­டத்­தக்க சந்தைப் பங்­க­ளிப்பை கைப்­பற்றும். புதிய விதி­மு­றை­க­ளின்­படி, பயன்­ப­டுத்­தாத அலை­வ­ரி­சையை, பிற நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்க, தொலை தொடர்பு நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டு உள்­ளது.
ஆர்­ஜி­யோவின் போட்­டியால், சிறிய நிறு­வ­னங்கள், இந்த விதி­மு­றையை பின்­பற்றி, பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு அலை­வ­ரி­சையை வழங்கி, இழப்பை தவிர்க்க முயலும் என, இந்­தியா ரேட்டிங்ஸ் தெரி­வித்­துள்­ளது.

வருது... வருது...ஆர்­ஜியோ, தற்­போ­துள்ள மொபைல் போன் சேவை நிறு­வ­னங்­களை விட, மேம்­பட்ட தொழில்­நுட்­பத்தில், பல்­வேறு கூடுதல் வச­தி­க­ளையும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்க உள்­ளது. அதி­ந­வீன தொழில்­நுட்­பத்தில் துல்­லி­ய­மான தொலை தொடர்பு, இணை­யத்தை மிக விரை­வாக அணுகும் வாய்ப்பு, ‘டிவி’யில், விருப்­ப­மான திரைப்­ப­டங்கள், தொடர்கள் உள்­ளிட்ட பொழு­து­போக்கு நிகழ்ச்­சி­களை காணும் வசதி ஆகி­ய­வற்­றுடன், வீடு­களில் கண்­கா­ணிப்பு கேமரா சேவை­யையும், தொகுப்­பாக வழங்க, ஆர்­ஜியோ திட்­ட­மிட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)