பதிவு செய்த நாள்
16 மார்2016
07:38

புதுடில்லி : வரும் ஏப்ரல், 1 முதல், மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம், 10 – 30 சதவீதம் உயர உள்ளது.
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான – ‘ஐ.ஆர்.டி.ஏ’, தொடர்ந்து, ஆறாவது ஆண்டாக, காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்த உள்ளது. இதன்படி, 1,000 சி.சி.,க்கு குறைவான என்ஜின் திறன் உள்ள கார்களுக்கு, 30 சதவீதமும், அதற்கு மேற்பட்ட திறன் உள்ள கார்களுக்கு, 25 சதவீதமும், காப்பீட்டு பிரீமியம் உயரும். இருசக்கர வாகனங்களுக்கு, 10 – 25 சதவீத மும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு, 15 – 30 சதவீதமும், காப்பீட்டு பிரீமியம் உயரும் என, தெரிகிறது. இந்த உயர்வு குறித்து, வரும் 20ம் தேதி வரை, பொதுமக்கள், ‘ஐ.ஆர்.டி.ஏ’ வலைதளத்தில் கருத்து தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில், புதிய பிரீமியம் நிர்ணயிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
வாகன காப்பீட்டின் கீழ், சொந்த வாகனங்களின் சேதங்களுக்கு அதிகபட்சமாக, 7.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டப்படி, மூன்றாம் நபர் காப்பீட்டில், இழப்பீட்டிற்கு வரம்பு கிடையாது. விபத்தில் உயிரிழந்தோரின் வயது, சம்பாதிக்கும் திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், இழப்பீடு கணக்கிடப்படுகிறது.மோட்டார் வாகன காப்பீட்டின் கீழ், இழப்பீடு கோரும் பிரிவில், வர்த்தக வாகனங்கள் முதலிடத்தில் உள்ளன. அடுத்து, பயணியர் வாகனங்களும், தனியார் கார்களும் உள்ளன.
வாகனம் - பிரீமியம் - புதியபிரீமியம் ( ரூபாயில்)கார் 1,000 சி.சி., - 1,468 - 1,908மோட்டார் சைக்கிள் 75 சி.சி., வரை - 519 - 569 150 சி.சி., வரை - 538 - 619 350 சி.சி., வரை- 554 - 693 350 சி.சி.,க்கு மேல்- 884 - 796
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|