பதிவு செய்த நாள்
19 மார்2016
04:55

புதுடில்லி:இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வரும், அமேசான் நிறுவனம், ‘தத்கல்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தங்கள் பொருட்களை இணையத்தின் மூலம் விற்க விரும்புபவர்களுக்கு, இத்திட்டம் உதவி செய்யும்.
இதுகுறித்து, அமேசான் நிறுவனத் தின் விற்பனை பிரிவு அதிகாரி கோபால் பிள்ளை கூறியதாவது: அமேசான் ‘தத்கல்’ திட்டத்தின் கீழ், ஒரு வேன், அனைத்து ஊர்களுக்கும் செல்லும். அங்கு, சிறு வியாபாரிகளை சந்தித்து, அவர்களின் பொருட்களை, அமேசான் இணையதளத்தில் விற்க, தேவையான உதவிகளை உடனிருந்து செய்யும்.
கடந்த நான்கு வாரங்களுக்கு முன், டில்லி மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் துவங்கப்பட்ட, தத்கல் திட்டத்தில், 15 நகரங்களில் உள்ள, 75 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதன் மூலம், ஐந்து கோடி பொருட்கள் விற்கப்பட உள்ளன.ஓவியர்கள், கைவினைஞர்கள் போன்றவர்கள், இந்த வசதியை பயன்படுத்தி வர்த்தகத்தில் ஈடுபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|