பதிவு செய்த நாள்
28 மார்2016
07:26
புதுடில்லி : ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான டிபாசிட்டிற்கான வட்டியை, 0.25 சதவீதம் முதல், 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதன்படி, 31 முதல், 45 நாட்கள் வரையிலான டிபாசிட்டிற்கான வட்டி, 6 சதவீதத்தில் இருந்து, 5.50 சதவீதம்; 46 முதல், 90 நாட்கள் வரை, 6.50 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதம்; 91 முதல், 179 நாட்கள் வரையிலான வட்டி, 6.75 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒன்று – இரண்டு ஆண்டுக்கான வட்டி, 7.75 சதவீதத்தில் இருந்து, 7.50 சதவீதம்; இரண்டு – மூன்று ஆண்டுகளுக்கான வட்டி, 7.50 சதவீதத்தில் இருந்து, 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான வட்டி, 7.25 சதவீதமாக உள்ளது. 5 முதல், 10 ஆண்டுகளுக்கான வட்டி, 7.50 சதவீதத்தில் இருந்து, 7.25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|