பதிவு செய்த நாள்
19 ஏப்2016
06:57
பெங்களூரு : ‘பாஸ்ட்பிலிம்ஸ்’ நிறுவனம், சினிமா படங்களை பதிவிறக்கம் செய்வதற்காக, மொபைல் ‘ஆப்’ எனப்படும், செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான பாஸ்ட்பிலிம்ஸ், பெங்களூரு, லண்டன் ஆகிய இடங்களை தலைமை அலுவலகங்களாகக் கொண்டு செயல்படுகிறது. சமீப காலமாக மொபைல் மூலமாக சினிமா பார்ப்பது அதிகரித்து வருகிறது. இப்போது அடுத்தகட்டமாக, எச்.டி., தரத்தில் மொபைல் போன் மூலம், சினிமா பார்ப்பதற்காக, செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, பாஸ்ட்பிலிம்ஸ்.இந்த, செயலியின் மூலம் தற்போது, 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களைப் பார்க்கலாம். இதற்கு, ஒரு நாளைக்கு, ஒரு ரூபாய் என, மாதத்திற்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த செயலியை அறிமுகம் செய்வதற்கான நிகழ்ச்சி, பெங்களூரில் நடந்தது. இதற்காக, அங்கு, சினிமா ஷூட்டிங் போல் நவீன அரங்குகள் அமைக்கப்பட்டு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|