எச்.டி., தரத்தில் சினிமா புதிய ‘ஆப்’ அறி­முகம்எச்.டி., தரத்தில் சினிமா புதிய ‘ஆப்’ அறி­முகம் ... டிரை­வர்­க­ளுக்கு உதவும் டெக்­னா­லஜி; டாடா மோட்டார்ஸ் முயற்சி டிரை­வர்­க­ளுக்கு உதவும் டெக்­னா­லஜி; டாடா மோட்டார்ஸ் முயற்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தொழில் விரி­வாக்கம்: பங்கு வெளி­யீட்டில் 31 நிறு­வ­னங்கள் ரூ.15,500 கோடி திரட்ட திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2016
07:00

மும்பை : நாட்டின் பொரு­ளா­தாரம் வளர்ச்சி கண்டு வரு­வதன் அடை­யா­ள­மாக, பல நிறு­வ­னங்கள், விரி­வாக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ளன. இதற்­காக, அவை, மூல­தனச் சந்­தையில் கள­மி­றங்கி, பங்கு வெளி­யீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளன.
சில நிறு­வ­னங்கள், அவற்றின் செயல்­பாட்டு மூல­தன தேவை­களை பூர்த்தி செய்து கொள்­ளவும், பழைய கடன்­களை திரும்ப செலுத்­து­வ­தற்கும், பங்கு வெளி­யீட்டில் இறங்க உள்­ளன. இந்த வகையில், நடப்பு, 2015 – 16ம் நிதி­யாண்டில், 31 நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீட்டின் மூலம், 15 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளன.ஏற்­க­னவே, 25 நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீட்டின் மூலம், 12 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய் திரட்ட, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யின் ஒப்­பு­தலை பெற்­றுள்­ளன. இந்த வகையில், திலீப் பில்­டுகான், நியூ­டில்லி சென்டர் பார் சைட், உஜ்வன் பைனான்­சியல் சர்­வீசஸ், குவஸ் கார்ப்­ப­ரேஷன், ஹிந்­துஜா லேலண்டு பைனான்ஸ், சீவேஸ் ஷிப்பிங் அண்டு லாஜிஸ்டிக்ஸ் நிறு­வ­னங்கள், வரும் மாதங்­களில் பங்கு வெளி­யீட்டில் கள­மி­றங்க உள்­ளன.
கடந்த மூன்று மாதங்­களில், ஆறு நிறு­வ­னங்கள், பங்கு வெளி­யீட்­டிற்­காக செபி­யிடம் விண்­ணப்­பித்­துள்­ளன; அவை, பங்கு வெளி­யீட்டின் மூலம், 3,000 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளன. கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 14 ஆயி­ரத்து, 461 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது; இது, முந்­தைய ஐந்து நிதி­யாண்­டு­களில் இல்­லாத அள­வாகும்.பங்கு வெளி­யீட்டின் மூலம், 2014 – 15ம் நிதி­யாண்டில், 2,770 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது.
கடந்த நிதி­யாண்டில், ‘எஸ்.எம்.இ.,’ எனப்­படும், சிறிய மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்கள் பிரிவில், 50 பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 311 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது; இதற்கு முந்­தைய நிதி­யாண்டில், 38 பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 250 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது. பங்­குச்­சந்தை ஏற்றம் காண வாய்ப்பு உள்­ளதால், மேலும் பல நிறு­வ­னங்கள், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொள்ளும் என நிதி வல்­லு­னர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர்.
இந்­தாண்டு இது­வரை...இந்­தாண்டு துவங்கி, இது­வரை ஏழு நிறு­வ­னங்கள் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்­டன. அவை, ஈக்­யுடாஸ் ஹோல்டிங்ஸ், இன்­பிபீம் இன்­கார்ப்­ப­ரேஷன், பாரத் வயர் ரோப்ஸ், ஹெல்த்கேர் குளோபல் என்­டர்­பி­ரைசஸ், குய்க்ஹீல் டெக்­னா­லஜீஸ், டீம் லீஸ் சர்­வீசஸ் மற்றும் பிரி­சிஷன் கேம்ஷாப்ட்ஸ் ஆகி­யவை ஆகும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)