ஜெட் ஏர்வேஸ் – ஜெட்லைட்  இணைப்­புக்கு பங்­கு­தா­ரர்கள் ‘ஓகே’ஜெட் ஏர்வேஸ் – ஜெட்லைட் இணைப்­புக்கு பங்­கு­தா­ரர்கள் ‘ஓகே’ ... ரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் ஒரு மாத ஆய்வு முடிவு ரிலையன்ஸ் ஜியோ இன்­போகாம் ஒரு மாத ஆய்வு முடிவு ...
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:19

வீடி­யோகான் இண்­டஸ்ட்ரீஸ் விற்­பனை ரூ.3,084 கோடி
வீடி­யோகான் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், கடந்த டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 84.42 கோடி ரூபாயை நிகர இழப்­பாக கொண்­டுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 18.61 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 1.63 சத­வீதம் குறைந்து, 3,135.14 கோடி ரூபாயில் இருந்து, 3,084.13 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது. கடந்த முழு ஆண்டில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 18 ஆயி­ரத்து, 904.35 கோடி ரூபாயில் இருந்து, 12 ஆயி­ரத்து, 387.03 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.
பஜாஜ் கார்ப்., விற்­பனை ரூ.227 கோடி
பஜாஜ் கார்ப்., நிறு­வனம், கடந்த மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 54.02 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலாண்டில், 54.42 கோடி ரூபா­யாக சற்று உயர்ந்­தி­ருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 3.24 சத­வீதம் சரி­வ­டைந்து, 235.42 கோடி ரூபாயில் இருந்து, 227.79 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. கடந்த முழு நிதி­யாண்டில், இந்­நி­று­வ­னத்தின் நிகர லாபம், 197.971 கோடி ரூபா­யா­கவும், விற்­பனை, 866.57 கோடி ரூபா­யா­கவும் அதி­க­ரித்­துள்­ளது.
எவரான் எஜு­கேஷன்விற்­பனை ரூ.3 கோடி
எவரான் எஜுகேஷன் நிறு­வ­னத்தின் விற்­பனை, கடந்த டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 3.03 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 6.16 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்­நி­று­வ­னத்தின் தனிப்­பட்ட நிகர இழப்பு, 18.55 கோடி ரூபாயில் இருந்து, 572.09 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
இந்­தியன் டெரைன் நிகர லாபம் ரூ.9 கோடி
இந்­தியன் டெரைன் நிறு­வனம், கடந்த டிச., மாதத்­துடன் நிறை­வ­டைந்த காலாண்டில், 9.05 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 4.94 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 15.24 சத­வீதம் அதி­க­ரித்து, 66.09 கோடி ரூபாயில் இருந்து, 76.16 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
அர­விந்தோ பார்மா விற்­பனை ரூ.2,302 கோடி
அர­விந்தோ பார்மா நிறு­வ­னத்தின் நிகர லாபம், 2015 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 18.12 சத­வீதம் உயர்ந்து, 465.71 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில், 394.27 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 10.97 சத­வீதம் உயர்ந்து, 2,074.36 கோடி ரூபாயில் இருந்து, 2,302.02 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
கேஸ்ட்ரால் இந்­தியா லாபம் ரூ.140.80 கோடி
கேஸ்ட்ரால் இந்­தியா நிறு­வனம், கடந்த முழு நிதி­யாண்டில், 615.20 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்டி உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 474.50 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலாண்­டு­களில், அந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 2.82 சத­வீதம் சரி­வ­டைந்து, 3,380.80 கோடி ரூபாயில் இருந்து, 3,285.30 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)