அன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியாஅன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியா ... ஐ.டி., மருத்­துவம், சுற்­றுலா... சீரிய வளர்ச்­சியில் சேவை துறை உல­க­ளவில் 2வது இடம் ஐ.டி., மருத்­துவம், சுற்­றுலா... சீரிய வளர்ச்­சியில் சேவை துறை உல­க­ளவில் 2வது ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.எப்., முதலீட்டை தொடர்வதே சிறந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:27

பி.எப்., பணத்தை எடுப்­பது தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை அரசு விலக்கி கொண்­டி­ருந்­தாலும், தவிர்க்க இய­லாத அவ­ச­ரத்­ தே­வைக்கு மட்­டுமே பணத்தை எடுக்க வேண்டும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.
பி.எப்., பணத்தை எடுப்­பது தொடர்­பான கட்­டுப்­பா­டு­களை அரசு திரும்ப பெற்­றுள்­ளது, ஊழி­யர்­களை நிம்­மதி பெரு­மூச்சு விட வைத்­துள்­ளது. ஏற்­க­னவே பட்ஜெட்டில் பி.எப்., நிதிக்கு, வரி விதிப்பு யோசனை முன்­வைக்­கப்­பட்டு தொழி­லா­ளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து அந்த முடிவு விலக்கிக் கொள்­ளப்­பட்­டது. இத­னி­டையே, பி.எப்., பணத்தை எடுப்­பது தொடர்­பாக புதிய கட்­டுப்­பாடுகள் கொண்டு வரப்­பட்­டன. பிப்­ர­வரி மாதம் பி.எப்., அலு­வ­ல­கத்தால் வெளி­யிடப்­பட்ட அறி­விக்கை படி, ஊழி­யர்கள் முழுத்­தொ­கை­யையும் இடையே விலக்கி கொள்­வ­தற்கு கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டது.
புதிய கட்­டுப்­பாடு விதி­முறை படி, வேலையில் இருந்து வில­கிய ஊழி­யர்கள் தொடர்ந்து இரண்டு மாதத்­திற்கு மேல் புதிய வேலையில் சேராமல் இருந்­தாலும் கூட, தங்கள் பங்கு பி.எப்., நிதியை மட்­டுமே எடுக்கும் நிலை உண்­டா­னது. நிறு­வனம் சார்பில் செலுத்­தப்­படும் தொகையை, அவர்கள் ஓய்வு காலத்தில் மட்­டுமே எடுக்க முடியும்.
கடும் எதிர்ப்புபொது­வாக ஓய்வு காலத்­திற்­கான பாது­காப்­பாக கரு­தப்­ப­டு­வதால், பி.எப்., நிதியை குறிப்­பிட்ட முக்­கிய தேவை­க­ளுக்கு மட்டுமே இடையில் எடுக்க முடியும். எனினும், இடைப்­பட்ட காலத்தில் பணியில் இருந்து வில­கு­ப­வர்கள் புதிய தொழில் துவங்­கு­வது உள்­ளிட்ட பல காரணங்­க­ளுக்­காக பி.எப்., நிதியை எடுக்க முற்­ப­டலாம். இந்த தேவை­க­ளுக்­காக முழு நிதி­யையும் எடுக்க முடி­யாது எனும் கட்­டுப்­பாடு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. எனவே தான், ஊழி­யர்கள் மற்றும் தொழி­லா­ளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்டு போராட்­டமும் நடத்­தப்­பட்டது. இதை­ய­டுத்து, புதிய கட்­டுப்­பாடுகள் விலக்கி கொள்­ளப்­பட்­டுள்­ளன.
அவ­சர தேவைஇதனால், பி.எப்., நிதியை எடுப்­பதில் உள்ள தடை நீங்­கி­யுள்­ளது. பி.எப்., சந்­தா­தா­ரர்­க­ளுக்கு இது நல்ல செய்தி என்­றாலும், தவிர்க்க இய­லாத அவ­ச­ரத்­தே­வைக்கு மட்­டுமே பி.எப்., நிதியில் கைவைக்க வேண்டும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.பி.எப்., என்­பது ஓய்­வு­கால நிதி என்­பதால், மருத்­துவ தேவை ஏற்­பட்டு, இந்த நிதி தவிர வேறு வழி­யில்லை எனும் சூழலில் மட்­டுமே பி.எப்., நிதியை எடுப்­பது சரி­யாக இருக்கும் என்­கின்­றனர்.
வீடு கட்­டுதல், கல்வி, திரு­மணம் உள்­ளிட்ட தேவை­க­ளுக்­காக பணம் எடுத்­துக் ­கொள்­ளலாம் என்­றாலும் கூட, இவற்றை அவ­சர தேவை­யாக கருத முடி­யாது என, நிதி ஆலோ­ச­கர்கள் கரு­து­கின்­றனர். வீடு வாங்­கு­வதை தள்­ளிப்­போ­டலாம் அல்­லது குறைந்த விலையில் வாங்க முற்­படலாம் என்று ஆலோ­சனை கூறு­கின்­றனர். மருத்துவ தேவை தவிர, மற்ற முக்­கிய தேவை­க­ளுக்கு கடன் வாங்­கு­வது உள்­ளிட்ட வேறு வழி­களை நாட முயற்­சிக்க வேண்டும் என்­கின்­றனர்.
கூட்டு வட்­டியின் பலன் இடைப்­பட்ட காலத்தில் பி.எப்., நிதியை முழு­வதும் எடுத்­துக்­கொள்ள தகுதி உடை­ய­வர்கள் கூட, தவிர்க்க இய­லாத கார­ணங்கள் இல்­லாத பட்­சத்தில் முத­லீட்டை தொடர்­வதே சரி­யாக இருக்கும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். பி.எப்., ஓய்வு கால பாது­காப்பு அளிக்கும் நிதி. மேலும், இது பென்ஷன் மற்றும் காப்­பீடு வச­தி­யையும் கொண்­டுள்­ளது. பி.எப்., முத­லீட்­டிற்கு, 8.8 சத­வீதம் வட்டி அளிக்­கப்­ப­டு­கி­றது. சேமிப்பு திட்­டங்­களை விட இது கூடுதல் பலன் அளிக்க கூடி­யது. பி.எப்., நிதி, அதிக வட்டி அளிப்­ப­தோடு, கூட்டு வட்டி அடிப்­ப­டையில் நீண்ட கால நோக்கில் மிகச்­சி­றந்த பலன் அளிக்கக் கூடி­ய­தாக இருக்­கி­றது. இடைப்­பட்ட காலத்தில் விலக்கி கொண்டால் இந்த பலனை இழக்க நேரிடும்.
அதே­போல பி.எப்., முத­லீடு எல்லா நிலை­க­ளிலும் வரிச்­ச­லுகை அளிக்கக்கூடி­ய­தாக இருக்­கி­றது. தொடர்ந்து பணம் செலுத்­தப்­ப­டாமல் முடங்­கிய கணக்­காக இருக்கும் நிலை­யிலும் வட்டி அளிக்­கப்­படும் என, அண்­மையில் அறி­விக்­கப்­பட்டுள்­ளதால், தொடர்ந்து வட்டி வரு­மானம் கிடைக்கும் வாய்ப்பை முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.எனவே, பி.எப்., நிதியை அதன் அடிப்படை தன்மை புரிந்து கொண்டு கையாள வேண்டும் என, நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)