பதிவு செய்த நாள்
27 ஏப்2016
23:57

பெங்களூரு : இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான, நந்தன் நிலேகனி, ‘ரயில்யாத்ரி டாட் இன்’ என்ற நிறுவனத்தில், பெருந்தொகையை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த, ரெய்ஸ்தா, மனிஷ் ரதி, சச்சின் சக்சேனா ஆகியோர் இணைந்து, 2014ல், ரயில் பயண விவரங்களை அறிய உதவும், ரயில்யாத்ரி டாட் இன் நிறுவனத்தை உருவாக்கினர். இந்நிறுவனம், ‘ரயில்யாத்ரி ஆப்’ மூலம், ரயில் பயணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்கி வருகிறது. இன்று, 20 லட்சத்திற்கும் அதிகமானோர், ‘ஸ்மார்ட்போன்’ மூலம், ‘ரயில்யாத்ரி ஆப்’ஐ பதிவிறக்கி, பயன்படுத்தி வருகின்றனர். தாமதமாக வரும் ரயில்கள், ரயில்கள் வந்து நிற்கும் நடைமேடை எண், காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட், ‘கன்பார்ம்’ ஆகுமா என்ற தகவல், உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், இந்த ஆப் தருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|