பதிவு செய்த நாள்
29 ஏப்2016
06:06

சென்னை : வாடிக்கையாளர்களுக்கு, சிறந்த சேவை வழங்குவதில், டி.வி.எஸ்., மோட்டார் முதலிடம் வகிக்கிறது என, ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜே.டி., பவர் நிறுவனம், இந்தியாவில் இரு சக்கர வாகன துறையில், விற்பனைக்கு பிந்தைய சேவை குறித்து ஆய்வு செய்தது. அதில், வாடிக்கையாளர் சேவையில், டி.வி.எஸ்., நிறுவனம் முன்னணியில் உள்ளதாக தெரிவித்துள்ளது. சேவைக்கு எடுத்துக் கொள்வது (22 சதவீதம்); சேவை அறிவுரை (21 சதவீதம்); சேவை தரம் (20 சதவீதம்); சேவை வசதி (19 சதவீதம்); சேவை துவங்குதல் (18 சதவீதம்) என ஐந்து காரணிகளின் அடிப்படையில் ஆய்வு கணக்கிடப்பட்டுள்ளது.ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில், 773 புள்ளிகளுடன், டி.வி.எஸ்., நிறுவனம் முதல் இடத்திலும், சுசூகி, 764 புள்ளிகளுடன், இரண்டாம் இடத்திலும், ராயல் என்பீல்டு, 758 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|