பதிவு செய்த நாள்
05 மே2016
04:54
புதுடில்லி : இந்தியாவின் வர்த்தக விவரங்களை, மக்கள் விரிவாக அறிந்து கொள்ள வசதியாக, புதிய இணையதள அடிப்படையிலான, டேஷ்போர்டை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின், ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தக விவரங்கள் குறித்த தகவல்கள், தற்போது கிடைத்து வந்தாலும், விரிவான தகவல்கள் பெறுவது சிரமமான ஒன்றாக இருக்கிறது. இதையடுத்து, ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வர்த்தக புள்ளி விவரங்களை, இணையதளம் மூலம், பொது மக்கள் தெரிந்து கொள்ளும், புதிய வசதியை, மத்திய அரசு துவக்கி உள்ளது. இத்திட்டத்தை, மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்களை துல்லியமான வரைபடங்களுடன், பொதுமக்கள் எங்கிருந்தாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். எக்ஸிம் அனலிட்டிக்ஸ் இந்த விவரங்களை தொகுத்து வழங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|