பதிவு செய்த நாள்
05 மே2016
04:55

பெங்களூரு : எம்.டி.ஆர்., நிறுவனம், உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில், 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, எம்.டி.ஆர்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் சர்மா கூறியதாவது: எம்.டி.ஆர்., புட்ஸ் நிறுவனம், 140 வகையான பொருட்களை விற்பனை செய்கிறது. கூடுதல் வாடிக்கையாளர்களை கவர, இணையதளத்தின் மூலமும், பொருட்களை விற்க உள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதன் ஒரு பகுதியாக, 45 ஆயிரம் டன் உற்பத்தி திறன் உடைய ஆலையின் திறன், 72 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்படும். தற்போதைய விற்றுமுதல், 700 கோடி ரூபாய். இது, ஆண்டுதோறும், 18 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. 2020ல், நிறுவனத்தின் விற்றுமுதல், 2,000 கோடி ரூபாயை எட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|