பதிவு செய்த நாள்
14 மே2016
07:54
புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனம், ‘டி.வி.எஸ்., ஸ்கூட்டி செஸ்ட் 110’ வரிசையில், ‘ஹிமாலயன் ஹைஸ்’ எனும் சிறப்பு பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக, உலகின் உயரமான மோட்டார் சாலை மூலம், பயணித்த முதல், 110 சிசி வாகனம் என்ற பெருமை அடைந்ததைக் கொண்டாடும் வகையில் இந்த, ‘ஹிமாலயன் ஹைஸ்’ சிறப்பு பதிப்பு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அனாம் ஹாசிம் எனும் சாகச பெண்மணி, இந்த ஆண்டின் துவக்கத்தில், ஸ்கூட்டி செஸ்ட் 110 ஸ்கூட்டர் மூலமாக, உலகின் மிக உயரமான, அதாவது, கடல் மட்டத்தில் இருந்து, 18,380 அடி உயரத்தில் உள்ள மோட்டார் சாலையின் மூலமாக, கார்டுங் லா எனும் கணவாயைக் கடந்தார். கார்டுங் லா கணவாய் வழியாக பயணித்த, 110 சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை கொண்டாடும் வகையில், அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டியின் விலை, டில்லியில், 46,113 ரூபாய் ஆகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|