அலை­வ­ரிசை ஒதுக்­கீட்டில் சேவை வரிக்கு எதிர்ப்புஅலை­வ­ரிசை ஒதுக்­கீட்டில் சேவை வரிக்கு எதிர்ப்பு ... புதிய சந்­தையை தேடும் ராகோல்டு தெர்மோ நிறு­வனம் புதிய சந்­தையை தேடும் ராகோல்டு தெர்மோ நிறு­வனம் ...
இணையம் பர­வ­லா­காத நிலை­யிலும் இந்­தி­யாவில் மின்­னணு வணிகம் ரூ.2.53 லட்சம் கோடி­யாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2016
08:04

புது­டில்லி : ‘இந்­தி­யாவில் மின்­னணு வணிகம், இந்­தாண்டு, 2.53 லட்சம் கோடி ரூபா­யாக உயரும் என, இந்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் கூட்­ட­மைப்­பான – ‘அசோசெம்’ மதிப்­பிட்­டு உள்­ளது.
இது தொடர்­பாக, இந்த அமைப்பு வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை விவரம்: இந்­தி­யாவில், மின்­னணு வணிகம் மிக வேக­மாக வளர்ந்து வரு­கி­றது. இத்­து­றையில், சில்­லரை விற்­பனை, வரும், 2020ல், 6.60 லட்சம் கோடி ரூபா­யாக உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இது, இந்­தி­யாவில் மின்­னணு வணிகம் சார்ந்த புதிய கண்­டு­பி­டிப்­பு­க­ளுக்கு துாண்­டு­கோ­லாக இருக்கும்.வரி விதிப்பு நடை­மு­றை­களை எளி­மை­யாக்கி, சரக்கு போக்­கு­வ­ரத்து வச­தி­களை மேம்­ப­டுத்­து­வதன் மூலம், மின்­னணு வர்த்­தகம் சிறப்­பாக வளர்ச்சி காணும். குறிப்­பாக, நீண்ட கால­மாக நிலு­வையில் உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி அம­லா­கும்­பட்­சத்தில், மின்­னணு வர்த்­தகம் மேலும் சூடு பிடிக்கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
இந்­தி­யாவில், வலை­தளம் வாயி­லாக, பொருட்கள் வாங்­கு­வோரின் எண்­ணிக்கை, 2013ல், இரண்டு கோடி­யாக இருந்­தது; இது, 2015ல், 3.90 கோடி­யாக உயர்ந்­துள்­ளது.இந்­தி­யாவில் இணைய பயன்­பாடு, 35.40 கோடி­யாக உள்­ளது. இது, ஆஸ்­தி­ரே­லி­யாவில், 90 சத­வீதம்; அமெ­ரிக்கா, 87; ஜப்பான், 86; பிரேசில், 53 மற்றும் சீனாவில், 46 சத­வீதம் ஆக உள்­ளது. ஆப்­ரிக்­காவைச் சேர்ந்த, கானா போன்ற ஏழை நாடு­களில், 100க்கு, 19 பேர் இணை­யத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர்.இந்­தி­யாவில் இணைய பயன்­பாடு குறை­வாக உள்ள போதிலும், அது சார்ந்த மின்­னணு வர்த்­த­கத்தின் வளர்ச்சி, நன்கு உள்­ளது. இதற்கு, மொபைல் போன் சேவையில் அறி­மு­க­மான, ‘3ஜி‘ மற்றும், ‘4ஜி’ தொழில்­நுட்­பமும், அதன் மூலம் அதி­வே­க­மாக வலை­த­ளத்தை அலசும் வச­தியும் துணை புரி­கின்­றன. கடந்த இரு ஆண்­டு­களில், மொபைல் போன் சந்­தா­தா­ரர்கள், இணைய சேவைக்­காக செல­வி­டு­வது, 54 சத­வீ­தத்தில் இருந்து, 64 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.இருந்­த­போ­திலும், மொபைல் போனில், இணை­யத்தின் சரா­சரி வேகம், வினா­டிக்கு, 1.7 மெகா பிட் என்ற அளவில், சீனா, சிங்­கப்பூர், தாய்­லாந்து, ஹாங்காங் ஆகிய நாடு­களை விட, குறை­வாக உள்­ளது.
அது­போல, இணை­யத்தின் சரா­சரி வேகத்­திலும், வினா­டிக்கு, 2 மெகாபிட் என்ற அள­வுடன், உலக நாடு­களில், இந்­தியா, 115வது இடத்தில் உள்­ளது.மின்­னணு வணி­கத்தில், சமீ­பத்தில் சில்­லரை விற்­ப­னையில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு, அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதனால், இத்­து­றையில் வரும் ஆண்­டு­களில் போட்டி அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

* கடந்த ஏப்­ரலில், மின்­னணு வணி­கத்தில், ‘பிளிப்கார்ட்’ முத­லி­டத்தைப் பிடித்­தது. அடுத்த இடங்­களை, ‘அமேசான், ஸ்நாப்டீல்’ ஆகி­யவை பிடித்­தன. * மின்­னணு சார்ந்த, வாடகை கார் வர்த்­த­கத்தில், இந்­தி­யாவின், ‘ஓலா’ முத­லி­டத்தில் உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)