பதிவு செய்த நாள்
17 மே2016
07:31

பெர்லின் : தனிநபர்களுக்கான சிறிய ரக விமானத்தை, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் ஒன்று வடிவமைத்திருக்கிறது.
உலகின் மிக எடைகுறைவான எலக்ட்ரிக் விமானத்தை, ஜெர்மன் நாட்டு நிறுவனமான லிலம் வடிவமைத்திருக்கிறது. இரண்டு பேர் பயணம் செய்ய கூடிய இந்த சிறிய விமானத்துக்கு, ஏர்போர்ட் தேவையில்லை. வீட்டு தோட்டமே போதுமானது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த லிலம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விகாண்ட் இது குறித்து கூறியதாவது: அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ற விதத்தில் ஒரு விமானத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மின்சாரத்தால் இயங்கும் இந்த விமானம், 500 கி.மீ., வரை செல்லும். மிக குறைவான சத்தமே எழுப்பும். 2018ம் ஆண்டில் இந்த விமானம் விற்பனைக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|