பதிவு செய்த நாள்
17 மே2016
07:37

லுாதியானா : பஞ்சாப் மாநிலம் லுாதியானாவைச் சேர்ந்த, ‘ஹீரோ சைக்கிள்’ நிறுவனம், ‘ஹீரோ ஆர்எக்ஸ் – 1’ என்ற சைக்கிள் மாடலுக்கு, 2000ம் ஆண்டு, இந்திய வடிவமைப்பு சட்டத்தின் கீழ், அறிவுசார் சொத்துரிமை பெற்றுள்ளது.
இந்நிலையில், இதே மாடலில், ‘ஏவொன் சைக்கிள்ஸ்’ நிறுவனம், ‘ஏவொன் எக்ஸ் – டிராக்’ என்ற சைக்கிளை விற்பனை செய்து வருவதாக, ஹீரோ சைக்கிள்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த சைக்கிள் தயாரிப்பை நிறுத்துமாறு, கடந்த மாதம், ஹீரோ, ஏவொன் நிறுவனத்திற்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது. இந்நிலையில் ஹீரோ, தன் சைக்கிள் மாடலை காப்பி அடித்து, விற்பனை செய்து வருவதை தடை செய்யக் கோரி, ஏவொன் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே, குறிப்பிட்ட சைக்கிளின் வடிவமைப்பை மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக, ஏவொன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|