பதிவு செய்த நாள்
26 மே2016
00:21

புதுடில்லி : பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், தனி நபர் பிரீமிய வருவாயை, 14 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், ஆயுள் காப்பீட்டு சந்தையில், இந்த நிறுவனத்தின் பங்கு, 7.7 சதவீதம் என்றளவில் உள்ளது. பிர்லா சன் லைப், 5,700 கோடி ரூபாயை, மொத்த பிரீமியம் வருவாயாக ஈட்டி உள்ளது.இதில், தனிநபர் பிரீமியம், 700 கோடி ரூபாய்; நிறுவனம், 1,400 கோடி ரூபாய்; புதுப்பித்தல், 3,000 கோடி ரூபாய் என உள்ளது. இந்த நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 70 ஆயிரம் முகவர்கள் உள்ளனர்.
இதுகுறித்து, பிர்லா சன் லைப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நடப்பு நிதியாண்டில், எங்கள் நிறுவனத்தின், தனிநபர் பிரீமிய வருவாய், 13 – 14 சதவீதம் வளர்ச்சி அடைய திட்டமிட்டு உள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|