பதிவு செய்த நாள்
28 மே2016
05:12
பெங்களூரு : பழைய கார் விற்பனையில், ‘ரெனோ’ நிறுவனம் இறங்குகிறது. உலகில், புதிய கார்களுக்கு இணையாக, பழைய கார்கள் விற்பனையும் உள்ளது. குறிப்பாக, மேற்கு ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில், புதிய கார்களை விட, பழைய கார்களின் விற்பனை, மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், ரெனோ நிறுவனம், இந்தியாவில் கர்நாடக மாநிலம், பெங்களூரில், ‘ரெனோ செலக் ஷன்’ என்ற பெயரில், பழைய கார்கள் விற்பனையை துவக்கி உள்ளது. இங்கு, ரெனோ நிறுவன தயாரிப்புகள் மட்டுமின்றி, அனைத்து மாடல் கார்களும், விற்பனை செய்யப்பட உள்ளன. வாடிக்கையாளர்கள், பழைய காரை கொடுத்துவிட்டு புதிய, ரெனோ காரை வாங்குவதற்கும் வசதி செய்து தருகின்றனர்.விரைவில் ஜெய்ப்பூர், சண்டிகர், நாக்பூர் ஆகிய நகரங்களிலும், ரெனோ நிறுவனம், பழைய கார் விற்பனையை துவக்க உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|