பதிவு செய்த நாள்
30 மே2016
07:46

புதுடில்லி : இந்திய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில், தகுதி வாய்ந்த ஆட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக, ‘டெலாய்ட் இந்தியா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், உலகளவில், நிறுவனங்கள் பயன்படுத்தும், மனித வள மூலதனம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. கடந்த, 2015ம் ஆண்டு, அக்., – டிச., வரையிலான காலாண்டில், 130க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த, 7,000 நிறுவனங்களில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவைச் சேர்ந்த, 239 நிறுவனங்களின் தலைவர்கள், மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வறிக்கை விவரம்:இந்திய நிறுவனங்கள், அவற்றின் பாரம்பரிய கலாசார பெருமைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. ஆய்வில், 10க்கு எட்டு நிறுவனங்கள், நிறுவனத்தின் கலாசாரம் தான் மிகவும் முக்கியம் என, தெரிவித்துள்ளன.
தகுதியான ஆட்கள்ஆய்வில், 35 சதவீதம் பேர், தங்கள் நிறுவனங்களின் கலாசாரத்தை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். கலாசார மாற்றத்திற்கு தயாராக உள்ளதாக, 22 சதவீதம் பேர் கூறினர். தலைமை பொறுப்பு, உயர்மட்ட பதவி, இரண்டாம் நிலை பதவிகளில், தகுதியான ஆட்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக, 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்திய நிறுவனங்கள், உயர் பொறுப்புகளுக்கு தகுதி வாய்ந்தோர் கிடைக்காமல் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளன. இத்தகைய சூழலில், இந்திய நிறுவனங்கள், ஊழியர்களின் தலைமை பண்புகளை வளர்ப்பதற்கும், அனைத்து மட்டங்களிலும், அத்தகையோரை உருவாக்குவதற்கும் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும். அடுத்த தலைமுறை தலைவர்கள், பெண்கள் மற்றும் பலதரப்பட்ட ஆற்றல் உள்ளோரை உருவாக்கவும், ஊக்குவிக்கவும், திறன் வளர்ப்பு திட்டங்களை, இந்திய நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்.
முக்கியத்துவம்அவற்றின் மூலம், சர்வதேச அளவில் பெருகி வரும் ஆளுமை திறன், தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகிய சவால்களை சமாளிக்க கூடிய, தலைமை பண்பாளர்களை உருவாக்க முடியும்.இந்த ஆய்வில், சர்வதேச நிறுவனங்கள், அவற்றின் செயல்திட்ட வடிவமைப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளன. அடுத்து, புதிய சிந்தனையுடன் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது; பணியாளர் நிர்வாகம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. இந்த ஆய்வில், சர்வதேச நிறுவனங்களை பொறுத்தவரை, தலைமை பொறுப்பில் ஆள் பற்றாக்குறை பிரச்னை, நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தலைமை பொறுப்பு, உயர்மட்ட பதவி, இரண்டாம் நிலை பதவிகளில், தகுதியான ஆட்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக, 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|