பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
07:34

புதுடில்லி : ஆந்திராவின், கிருஷ்ணா – கோதாவரி படுகையில் உள்ள, ‘கேஜி – டி6’ தொகுப்பில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு, 7,645 சதுர கி.மீ., பரப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், 6,497 சதுர கி.மீ., பரப்பை, மத்திய அரசு திரும்ப எடுத்துக் கொள்ள முடிவு செய்தது. இதையடுத்து, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு ரிலையன்ஸ் கடந்த ஆண்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது. அதில், ‘குறிப்பிட்ட பகுதியில், ஐந்து எரிவாயு வளப் பகுதிகளை கண்டு பிடிக்க, பல ஆயிரம் கோடிகளை செலவு செய்துள்ளதால், இழப்பீடு வழங்க வேண்டும்’ என, கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், நோட்டீசை திரும்ப பெறுவதாக, பெட்ரோலிய அமைச்சகத்திற்கு ரிலையன்ஸ் கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக போக விரும்பியதுதான், ரிலையன்சின் திடீர், ‘பல்டி’க்கு காரணம் என, கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|