பதிவு செய்த நாள்
08 ஜூன்2016
07:36

மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நடப்பு நிதியாண்டின், இரண்டாவது நிதிக் கொள்கை அறிவிக்கையை நேற்று வெளியிட்டார். அதில், நிதி வல்லுனர்கள் எதிர்பார்த்தபடி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வங்கிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி, மாற்றமின்றி, 6.50 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி, இறுதியாக, ஏப்ரல், 5ல், ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 6.50 சதவீதமாக நிர்ணயித்தது. அதே சமயம், வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 6 சதவீதமாக நிர்ணயித்தது. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை பணவீக்கம், பருவமழை, சர்வதேசநிதிச் சந்தை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், ‘ரெப்போ’ வட்டியை குறைப்பது அல்லது உயர்த்துவது குறித்து, ரிசர்வ் வங்கி முடிவெடுக்கிறது. கடந்த ஏப்ரலில், உணவுப் பொருட்கள் விலை உயர்வால், சில்லரை பணவீக்கம், எதிர்பார்த்ததை விட அதிகமாக, 5.39 சதவீதம் என்ற அளவில் உயர்ந்தது. இது, முந்தைய மார்ச்சில், 4.83 சதவீதமாக இருந்தது.சர்வதேச சந்தையில், விளைபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. உள்நாட்டில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமலானால், விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது. ஆகவே, அடுத்து வரும் மாதங்களில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வட்டி விகிதம் முடிவு செய்யப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|