பதிவு செய்த நாள்
10 ஜூன்2016
07:14
புதுடில்லி : உலகளவில், ஸ்மார்ட் போன் விற்பனை சரிவடைந்து உள்ள சூழலிலும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகி இருப்பதாக, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. புதிது புதிதாக ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாவதால், வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில், உலகம் முழுவதும், ஸ்மார்ட் போன்கள் விற்பனை, 150 கோடியாகவும், 2020ம் ஆண்டில், 190 கோடியாகவும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, உலகில், மொபைல் போன் விற்பனை குறைவாக இருந்தது. இருப்பினும், இந்தியாவில், 2015ல், 16.70 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு விற்பனையான அனைத்து மொபைல் போன்களில், ஸ்மார்ட் போனின் பங்களிப்பு, 61 சதவீதம் என்றளவில் உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஸ்மார்ட் போன் விற்பனை, 29.5 சதவீதம் அதிகரிக்கும் எனவும் கார்ட்னர் தெரிவித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|