பதிவு செய்த நாள்
11 ஜூன்2016
07:35

புனே : ஹேவல்ஸ் நிறுவனம், ‘மாடுலர் சுவிட்ச்’ விற்பனையில், சந்தை பங்களிப்பை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. ஹேவல்ஸ் இந்தியா நிறுவனம், ‘சுவிட்ச் மற்றும் ஒயர்’ உள்ளிட்ட மின் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், அண்மையில் புதிய வகையிலான நவீன, மாடுலர் சுவிட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், இந்த சந்தையில், 10 சதவீத பங்களிப்பை பெறுவதற்கு, ஹேவல்ஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதுகுறித்து, ஹேவல்ஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவீன வகை சுவிட்ச், நீலம், சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட, ஏழு நிறங்களில், 19 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சுவிட்சுகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் விற்பனை மூலம் அடுத்த, இரண்டு மூன்று ஆண்டுகளில், 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|