பதிவு செய்த நாள்
07 ஜூலை2016
05:46

புதுடில்லி : சீனா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், இந்தியாவில் மலிவு விலையில், குறிப்பிட்ட உருக்கு பொருட்களை அதிகளவில் குவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் கோட்டட் புராடெக்ட்ஸ் நிறுவனம் ஆகியவை, பொருள் குவிப்பு தடுப்பு மற்றும் துணை தீர்வைகள் தலைமை இயக்குனரகமான, டி.ஜி.ஏ.டி.,வில் புகார் தெரிவித்துள்ளன. அந்த புகாரில், வண்ணம் பூசப்பட்ட உருக்கு மற்றும் இரும்பு தகடுகள், மலிவான விலையில், சீனா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாவதால், உள்நாட்டு தொழில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.ஏ.டி., மேற்கொண்ட ஆய்வில், புகாருக்கு அடிப்படை ஆதாரமுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சீனா மற்றும் ஐரோப்பிய உருக்கு பொருட்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|