பதிவு செய்த நாள்
07 ஜூலை2016
05:48

புதுடில்லி : நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில், வீடு விற்பனை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. இந்தாண்டு ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, புனே, ஆமதாபாத் ஆகிய, எட்டு நகரங்களில், 1.35 லட்சம் வீடுகள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 1.26 லட்சம் வீடுகள் என்ற அளவில் இருந்தது. ஆக, வீடுகள் விற்பனை, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
டில்லிஅதேசமயம், இதே காலத்தில், புதிய வீடுகள் அறிமுகம், 1.17 லட்சத்தில் இருந்து, 1.07 லட்சமாக குறைந்துள்ளது. விற்பனையாகாமல் தேங்கியுள்ள வீடுகளின் எண்ணிக்கை, 7 சதவீதம் குறைந்து, 7.10 லட்சத்தில் இருந்து, 6.60 லட்சமாக சரிவடைந்து உள்ளது.டில்லி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மட்டும், 2 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. அதனால், அப்பகுதியில் வீட்டின் விலை குறைந்துள்ளது. ஒரு சதுர அடி பரப்பின் சராசரி விலை, 4,511 ரூபாயில் இருந்து, 4,346 ரூபாயாக சரிவடைந்து உள்ளது.டில்லி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த ஆறு மாதங்களில், வீடு விற்பனை, 23,092 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில், இது 25 ஆயிரமாக இருந்தது.
பெங்களூருஇதே காலத்தில், இப்பகுதியில் புதிய வீடுகள் அறிமுகம், 29,458லிருந்து, 17,462 ஆக சரிவடைந்து உள்ளது. இதர நகரங்களில், வீட்டின் விலை உயரவோ, குறையவோ இல்லை. வீடு விற்பனையில், பெங்களூரு, புனே நகரங்கள், தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|