பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
23:32

சென்னை : அசோக் லேலாண்ட் நிறுவனம், 450 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பஸ்கள் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை பெற்று உள்ளது. இந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலாண்ட், மோட்டார் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், நடப்பாண்டில் இதுவரை, பல்வேறு மாநில அரசுகளின் போக்குவரத்து துறையில் பயன்படுத்த, 3,566 பஸ்களை தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை பெற்று உள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் பஸ் தயாரிப்பில் சந்தை பங்களிப்பு, 30 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து, அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பஸ் பிரிவு மூத்த துணை தலைவர் வெங்கட்ராமன் கூறியதாவது: கடந்த ஆண்டில், உள்நாட்டு பஸ் விற்பனையில், எங்கள் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 44 சதவீதம் என்றளவில் இருந்தது. மாநில போக்குவரத்து கழகங்களுக்கு பஸ் தயாரித்து வழங்குவதில், அசோக் லேலாண்டு முன்னணியில் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|