பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
23:33

சென்னை : ஷீன்லாக் நிறுவனம், ஜென்சன் அண்டு நிக்கல்சன் உடன், கூட்டு சேர்ந்ததன் மூலம், 750 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதீர் பீட்டர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், மரச்சாமான்களில் பயன்படுத்தப்படும், ‘பாலீஷ்’ தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில், பெயின்ட் துறையின் சந்தை மதிப்பு, 40 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. எங்கள் நிறுவனமும், அலங்கார பெயின்ட் விற்பனையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. பெயின்ட் துறையில் களம் இறங்குவதற்கு, ‘பிரான்ட், டீலர், தொழில்நுட்பம்’ ஆகியவை தேவை. எனவே, இந்தியாவில், பெயின்ட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜென்சன் அண்டு நிக்கல்சன் நிறுவனத்துடன், ஷீன்லாக் கூட்டு சேர்ந்து உள்ளது. இதன் மூலம், 750 கோடி ரூபாய்க்கு, வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|