பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
23:34

கோல்கட்டா : எஸ்ஸார் ஆயில் நிறுவனம், மேற்கு வங்க மாநிலத்தில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு, மேற்கு வங்க மாநிலத்தில் மீத்தேன் எடுக்கும் சுரங்கம் உள்ளது. அங்கு கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்ட மிட்டு உள்ளது. இதுகுறித்து, எஸ்ஸார் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்திற்கு, ரானிகுஞ்ச் என்ற இடத்தில், மீத்தேன் எடுக்கும் சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கத்தில், 3,300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு, 10 லட்சம் எஸ்.எம்.சி.டி., அளவுக்கு மீத்தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும், 2017 – 18ம் நிதியாண்டில், கூடுதலாக, 700 கோடி ரூபாய் – 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், மீத்தேன் உற்பத்தித்திறன், 30 லட்சம் எஸ்.எம்.சி.டி.,யாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|