பதிவு செய்த நாள்
14 ஜூலை2016
23:35

ஐதராபாத் : ஜெய் ராஜ் இஸ்பத் நிறுவனம், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், உருக்கு தொழிற்சாலை அமைக்க உள்ளது. தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள, தரூர் மண்டல் என்ற இடத்தில், ஜெய் ராஜ் இஸ்பத் நிறுவனம், உருக்கு தொழிற்சாலை அமைக்க முடிவு செய்து உள்ளது. மொத்தம், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலை, ஆண்டுக்கு, 10 லட்சம் டன் உருக்கு தயாரிக்கும் திறன் உடையதாக இருக்கும். இதற்காக, தெலுங்கானா அரசு, 250 ஏக்கர் நிலத்தை, அந்த நிறுவனத்திற்கு வழங்க உள்ளது. இதுகுறித்து, தெலுங்கானா அரசுடன் பேச்சு நடந்துள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: உருக்கு தொழிற்சாலைக்காக, இரண்டு கட்டங்களாக, 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். ஆண்டுக்கு, 10 லட்சம் டன் உருக்கு தயாரிக்கும் திறன் உடைய, உருக்காலையின் மூலம், 1,200 முதல், 3,500 பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|