பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
23:22

புதுடில்லி : கிராண்ட் தார்ன்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த ஏப்., – ஜூன் காலாண்டில், நம்பிக்கையான வர்த்தக சூழல் குறித்து, இந்தியா உள்ளிட்ட, 36 நாடுகளைச் சேர்ந்த, 2,500 தொழில் நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. வர்த்தக துறையின் நம்பிக்கையில், முதலிடத்தில் இருந்த இந்தியா, தொடர்ந்து இரு ஆண்டுகளாக, மதிப்பீட்டு காலாண்டில், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாவதில் ஏற்பட்டுள்ள தாமதம்; முன்தேதியிட்ட வரி பிரச்னையில் தெளிவற்ற நிலை; பொதுத் துறை வங்கிகளிள் வாராக்கடன் பிரச்னை போன்றவற்றால், இந்தியா மீதான வர்த்தக நம்பிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், முதலீட்டின் மீதான வருவாய் அதிகரிக்கும் என்ற பிரிவில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|