பதிவு செய்த நாள்
15 ஜூலை2016
23:24

புதுடில்லி : ஹோண்டா நிறுவனம், 1.90 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம், கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், அக்கார்டு, சி.ஆர்.வி., சிட்டி உள்ளிட்ட மாடல்களைச் சேர்ந்த, 1.90 லட்சம் கார்களை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, சிட்டி மாடலில், 1.37 லட்சம் கார்கள்; அக்கார்டு, 22,483; ஜாஸ், 15,706; சிவிக், 13,603 கார்களை திரும்ப பெற உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், இந்திய சந்தையில், ஹோண்டா நிறுவனம் ஏழு முறை, கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டில் கார் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள நிறுவனங்கள், 2012 ஜூலை மாதம் முதல் இதுவரை, 24 லட்சம் கார்களை திரும்ப பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|