பதிவு செய்த நாள்
21 ஜூலை2016
07:34

புதுடில்லி : ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து, இந்தியாவில் உள்ள ஆறு கிளைகளை மூடப் போவதாக அறிவித்து உள்ளது. ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து குழுமம், சர்வதேச அளவில் வங்கி மற்றும் நிதி சேவையில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம், எடின்பெர்கில் உள்ளது. இந்த குழுமத்திற்கு இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஆசிய நாடுகளில் மூன்று கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவனத்துக்கு இந்தியாவில் தற்போது, 10 கிளைகள் உள்ளன. இதில், பெங்களூரு, ஐதராபாத், புனே, வதோதரா, குர்கான், நொய்டா ஆகிய இடங்களில் உள்ள கிளைகளை, வரும் அக்., 1ம் தேதி முதல் மூடுவதற்கு, ராயல் பாங்க் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சென்னை, கோல்கட்டா, மும்பை, டில்லியில் உள்ள கிளைகள் படிப்படியாக மூடப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|