பதிவு செய்த நாள்
23 ஜூலை2016
01:12

புதுடில்லி : ‘‘மத்திய அரசின், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், கப்பல் துறையில், 4,272 கோடி ரூபாய் முதலீடு குவிந்துள்ளது,’’ என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.
அவர், லோக்சபாவில் கூறியதாவது: மத்திய அரசு, 2014, செப்டம்பரில், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அது முதல், இந்தாண்டு, மே இறுதி வரை, கப்பல் துறையில், 63.61 கோடி டாலர், அதாவது, இந்திய மதிப்பில், 4,272 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு குவிந்துள்ளது.இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்க வசதியாக, சரக்கு போக்குவரத்து நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதனால் முக்கிய துறைமுகங்களில் நெரிசல் குறைந்து, சரக்குகள் தேங்குவது கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், சரக்கு பெட்டகங்களை மிக விரைவாக பரிசோதிக்கும் நவீன, ‘ஸ்கேனர்’ சாதனங்கள், துறைமுகங்களில் நிறுவப்பட்டுள்ளன.
இத்துடன், சரக்கு வினியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு தொழில்நுட்ப நடைமுறை, சென்னை, கொச்சி உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களில் தானியங்கி முறையில் செயல்படும் வாயில்களை நிறுவியது போன்றவற்றால், துறைமுகங்களில் இருந்து சரக்குகள் விரைவாக வெளியேற வழி ஏற்பட்டுள்ளது.
முக்கிய துறைமுகங்களில், ரயில் – சாலை இணைப்பு வசதிக்கு தடையாக உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை, ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில், சோதனை அடிப்படையில், சரக்கு பெட்டக போக்குவரத்தை அடையாளம் காணும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|