பதிவு செய்த நாள்
29 ஜூலை2016
04:01
புதுடில்லி : மாருதி சுசூகி நிறுவனம், இலகுரக வர்த்தக வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த, 34 ஆண்டுகளாக பயணிகள் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மாருதி நிறுவனம், ‘சூப்பர் கேரி’ என்ற பெயரில், இலகுரக வர்த்தக வாகனத்தை, அடுத்த மாதம், அறிமுகம் செய்ய உள்ளது. முதல் கட்டமாக, குஜராத் – ஆமதாபாத், மேற்கு வங்கம் – கோல்கட்டா, பஞ்சாப் – லுாதியானா ஆகிய நகரங்களில், விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விலை, மேற்கண்ட நகரங்களில் முறையே, 4.03 லட்சம் ரூபாய்; 4.11 லட்சம் ரூபாய்; 4.01 லட்சம் ரூபாய் என்றளவில் இருக்கும்.
இதுகுறித்து, மாருதி நிறுவனத்தின் விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.கால்சி கூறியதாவது:‘சூப்பர் கேரி’ வாகனத்திற்காக, 300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது, ஒரு லிட்டர் டீசலுக்கு, 22.07 கி.மீ., துாரம் செல்லும். இதில், 740 கிலோ எடை உள்ள சரக்குகளை ஏற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|