டி.வி.எஸ்., – பி.எம்.டபிள்யூ., கூட்­டணி தயா­ரிப்பு பணிகள் துவக்கம்டி.வி.எஸ்., – பி.எம்.டபிள்யூ., கூட்­டணி தயா­ரிப்பு பணிகள் துவக்கம் ... மந்­த­நிலை மாறி­யது! மீண்டும் சூடு பிடித்­தது கார் விற்­பனை ; தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் உற்­சாகம் மந்­த­நிலை மாறி­யது! மீண்டும் சூடு பிடித்­தது கார் விற்­பனை ; தயா­ரிப்பு ... ...
பன்­முக வங்கி: கார்ப்­பரேட் நிறு­வ­னங்­க­ளுக்கு ‘செக்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2016
23:38

மும்பை : நகரம் முதல் குக்­கி­ராமம் வரை, வங்கிச் சேவையை விரி­வு­ப­டுத்த, மத்­திய அரசும், ரிசர்வ் வங்­கியும், பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றன. அவற்றில், ‘யுனி­வர்சல் பேங்க்’ என்ற, பன்­முக வங்கிச் சேவை திட்­டமும் ஒன்று.
தற்­போது, வங்கி சாரா நிதி நிறு­வ­னங்கள், வங்­கிகள் ஆகி­யவை அளிக்கும் வெவ்­வேறு நிதிச் சேவைகள் அனைத்­தையும், பன்­முக வங்­கிகள் ஒருசேர வழங்கும். அத்­துடன், வணிக வங்கிச் சேவை, முத­லீடு, காப்­பீடு, மியூச்­சுவல் பண்டு உள்­ளிட்ட, பிற நிதிச் சேவைகள் அனைத்­தையும், பன்­முக வங்­கிகள் அளிக்கும். பல்­வேறு பொருட்­களை, ‘சூப்பர் மார்க்கெட்’ எப்­படி வழங்­கு­கி­றதோ, அது போல, அனைத்து வித­மான நிதிச் சேவை­க­ளையும், வாடிக்­கை­யா­ளர்கள், ஒரு பன்­முக வங்­கியின் கீழ் பெறலாம். இவ்­வங்கி உரி­மத்­திற்­கான விதி­மு­றை­களை, ரிசர்வ் வங்கி வெளி­யிட்டு உள்­ளது.
அதன் விபரம் :* வங்கி மற்றும் நிதித் துறையில், 10 ஆண்­டுகள் அனு­ப­வ­முள்ள தனி­நபர், நிறு­வ­னங்கள், வங்கி சாரா நிதி நிறு­வ­னங்கள், பன்­முக வங்கி துவங்­கலாம் * பன்­முக வங்­கியில் குறைந்­த­பட்சம், 500 கோடி ரூபாய் பங்கு மூல­தனம் மேற்­கொள்ள வேண்டும்; கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், 5,000 கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்­டி­ருக்க வேண்டும்* கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் மொத்த வரு­வாயில், அவற்றின் வங்கி சாரா நிதி நிறு­வ­னங்­களின் வருவாய், 40 சத­வீ­தத்­திற்கு குறை­வாக இருந்தால், பன்­முக வங்கி துவங்க உரிமம் பெறலாம்; அதற்கு மேல் இருந்தால், உரிமம் வழங்­கப்­பட மாட்­டாது* அத்­த­கைய தொழிற்­கு­ழு­மங்கள், பன்­முக வங்­கி­களில், 10 சத­வீதம் பங்கு முத­லீடு மேற்­கொள்ள அனு­ம­திக்­கப்­படும். ரிசர்வ் வங்­கியின் மேற்­கண்ட விதி­மு­றைகள் கார­ண­மாக, ரிலையன்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ, பஜாஜ் போன்ற தொழிற்­கு­ழு­மங்கள், பன்­முகவங்கி துவங்க முடி­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)