பதிவு செய்த நாள்
05 ஆக2016
00:21

புதுடில்லி : ஸ்கோடா நிறுவனம், கார் விற்பனையை அதிகரிப்பதற்காக, புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஐரோப்பிய நாட்டை சேர்ந்த போக்ஸ்வேகன் குழுமம், பிரீமியம் வகையை சேர்ந்த பந்தய வாகனங்களை அறிமுகம் செய்ய முடிவு செய்து உள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் கார் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்கோடா நிறுவனமும், கார் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, நான்கு புதிய வாகனங்களை அறிமுகம் செய்வதுடன், டீலர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. மேலும், வாடிக்கையாளரை கவரும் வகையில், வாகனங்களில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணி செய்து தரவும் உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், டீலர் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைக்காக, 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|