பதிவு செய்த நாள்
05 ஆக2016
00:22

புதுடில்லி : பிரிட்டானியா நிறுவனம், பிஸ்கட் மட்டுமின்றி, நொறுக்குத்தீனி உள்ளிட்ட புதிய உணவு பொருட்கள் விற்பனையிலும் களம் இறங்க உள்ளது. பிரிட்டானியா இண்டஸ்ட்ரிஸ், ‘50:50, டைம் பாஸ்’ என்ற பெயரில், உப்பு சுவை உடைய, பிஸ்கட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட உப்பு சுவையில் நொறுக்குத்தீனி, சிற்றுண்டி உணவு பொருட்களை விற்பனை செய்ய, பிரிட்டானியா முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், உணவு பொருட்கள் துறையில், அதிக சந்தை பங்களிப்பை பெற முடிவு செய்துள்ளது. இவற்றை, உடனே அறிமுகம் செய்யப் போவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு பின், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உப்புமா, கூழ், ஓட்ஸ் ஆகிய சிற்றுண்டி வகைகள்; மேம்படுத்தப்பட்ட உப்பு சுவை உடைய நொறுக்குத்தீனி வகைகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|