பதிவு செய்த நாள்
05 ஆக2016
00:33

மத்திய அரசு, ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை, ராஜ்யசபாவில் நிறை வேற்றி உள்ளது. இது, பலகட்ட நடைமுறைகளுக்கு பின், சட்டமாக்கப்பட்டு, அடுத்த நிதியாண்டில் அமலுக்கு வரும் என, தெரிகிறது. இந்த சட்டம் குறித்து, பல்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்:
சந்திரஜித் பானர்ஜி, டைரக்டர் ஜெனரல், இந்திய தொழிலக கூட்டமைப்பு: ஜி.எஸ்.டி., வெளிப்படையான வணிக நடைமுறையை கொண்டு வரும். இதனால், வரும் ஆண்டுகளில் முதலீடுகள் அதிகரிக்கும். அதிக வரி வருவாய் மற்றும் முதலீடுகளால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்படும்.
பேராசிரியர் ஜே.டி.அகர்வால், ஐ.ஐ.எப்.: தற்போது, அனைத்து பொருட்களுக்கும், 33 – 35 சதவீத அளவிற்கு, பல்வேறு வரிகளை செலுத்த வேண்டியுள்ளது. ஜி.எஸ்.டி., அமலானால், நாடு முழுவதும் ஒரே சீராக, 18 சதவீத வரியாக குறையும். இதில், மது, பெட்ரோலிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள போதிலும், அதுவும், 22 சதவீதத்தை தாண்டாது.
பேராசிரியர் ஜி.ரகுராம், ஐ.ஐ.எம்., ஆமதாபாத்: சாலைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு, ஜி.எஸ்.டி., உதவும். சரக்கு போக்குவரத்து விரைவாக நடைபெறும். இதன் மூலம், சரக்கு வினியோகச் செலவினம், 10 – 15 சதவீதம் குறையும்.
குருசரண் பதுரா, டைரக்டர் ஜெனரல், எப்.ஏ.எஸ்.டி: விமான பயணக் கட்டணம் உயரும். தற்போது, விமான பயணத்திற்கு, 15 சதவீத சேவை வரி விதிக்கப்படுகிறது. இது, 18 சதவீதமாக உயரும். அத்துடன், விமானங்கள் பழுதுப் பார்ப்பு, விமான நிலைய சேவைகள் உள்ளிட்டவற்றுக்கான செலவும் அதிகரிக்கும்
ஏ.கே.ரஸ்டகி, பொது மேலாளர், நிப்பான் ஆடியோடிரானிக்ஸ்: கார் தயாரிப்பாளர்கள், வேறு மாநிலத்திற்கு வாகனங்களை விற்கும் போது, 2 சதவீத மத்திய விற்பனை வரி விதிக்கின்றனர். இது, கார் விலையில் சுமத்தப்படுகிறது. வாகன உதிரிபாகங்களுக்கு, அதிகபட்ச விலை அடிப்படை யில், கலால் வரி விதிப்பு உள்ளது. ஜி.எஸ்.டி., அமலானால், இந்த வரிச்சுமைகள் நீங்கும்.
– நமது சிறப்பு நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|